ஆத்ம நமஸ்காரம்

புருவமையத்தில் இரண்டு கை கட்டைவிரலையும் வைத்து மேல்முகமாக சேர்த்து உள்முகமாக பார்க்க வேண்டும். அந்த இடம் ஆத்மா வசிக்கும் இடம் . இப்படி ஆத்மா நமஸ்காரம் என்று கூறுவதால் உள்ளிருக்கும் ஆத்மாவுக்கு வணக்கம் வைக்கிறோம், அங்கு வணக்கம் செலுத்தும் போது அனைத்து ஜீவனுக்கும் வணக்கம் வைத்தார் போல ஆகும்.
Swami

அன்னம் புசித்தால் மரிப்பாரில்லை

அன்னம் என்பது அசனமாய் இருக்கும் வாயு.
மாயை என்பது காணுகின்ற சராசரங்கள் அல்ல. நம்மிலிருந்து யாதொன்று இல்லாமல் போகிறதோ அதுவே மாயை, அது ஜீவ சக்தியான வாயு.

ஜீவனே ஈஸ்வரன்

நம்மில் உள்ளே இருக்கும் போது மட்டுமே சிவமாய் இருக்கிறது. அது சலித்து புலன் வழியாக வரும் போது ஜீவன், நசிக்காதபோது சிவன்.

மனமே குரு

அடங்கிய மனமே குரு. பந்தத்திற்கும் மோட்சத்திற்கும் மனமே காரணம். குரு சிஷ்யன் என்கிற நிலை இல்லை. அவனவனுக்கு அவனுடைய அடங்கிய மனமே குரு. மனதின் இடம் புருவமையம்.

ஜீவ சரித்திரம்

சிவானந்த பரமஹம்சருக்கு தனிப்பட்ட ஜீவ சரித்திரம் இல்லை. ஜீவன் ஒன்றே உள்ளது, அந்த ஜீவ சரித்திரமே சித்த வேதம்.